Friday, June 26, 2009

காய்கறி மட்டன் தால்ச்சா







தேவையான பொருட்கள்
  • துவரம் பருப்பு - 100 கிராம்
  • கடலை பருப்பு - 75 கிராம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 5
  • பீன்ஸ் - 50௦௦ கிராம்.
  • காரட் - 1
  • சிறிய கத்திரிக்காய் - 150௦ கிராம்
  • வாழைக்காய் - 1
  • எலும்பு கறி - 250 கிராம்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  • பட்டை, சோம்பு சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • மல்லி, கருவேப்பிலை
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மாங்காய் அல்லது புளி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை
இரண்டு பருப்புகளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்த பருப்புகளுடன் சிறிதளவு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சிறிது எண்ணெய், கறி சேர்த்து மூன்று விசில் வரை குக்கரில் வேகவைக்கவும்.

நன்றாக கொதிக்கும் சிறிதளவு தண்ணீரில் சிறிதாக வெட்டிய பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்திரிக்காய் போட்டு சிறிதளவு மஞ்சள் தூள், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் போட்டு சோம்பு, பட்டை, நறுக்கிய வெங்காயம் வதக்கவும். வதக்கியபிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். நைசாக வெட்டிய தக்காளி, தேவையான உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீராக தூள், தனியா தூள், இரண்டு பச்சை மிளகாய் , சிறிது மல்லி, கருவேப்பிலை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

மேற்கண்ட மசாலாவுடன் வேகவைத்த பருப்பு மற்றும் காய்கறிகளும், மாங்காய் அல்லது புளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து மல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் சிம் இல் வைத்து இறக்கிவிடவும்.

No comments:

Post a Comment