தேவையான பொருட்கள்
- மட்டன் -1/2 கிலோ
- வெங்காயம் - 1
- பழுத்த சிகப்பு தக்காளி - 4
- இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- சீராக தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- சிறுது மல்லி, பச்சை மிளகாய் - 2
- உப்பு ,- தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக அரைக்கவும்
- குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து தண்ணீர் காய்ந்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை காய்ச்சவும் .
- இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
- நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மட்டனை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
- மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீராக தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி விட்டு, குக்கரை மூடி விடவும்.
- 3 விசில் வந்த பிறகு குக்கரை திறந்து கரம் மசாலா தூள், நைசாக வெட்டிய ஒரு பச்சை மிளகாய் சிறிது மல்லி சேர்க்கவும்.
- அடுத்து 2 விசில் வந்த பிறகு தண்ணீர் வற்றி இருக்கிறதா என்று பார்த்து இறக்கிவிடவும்.
- பரிமாறும் போது நைசாக வெட்டிய ஒரு பச்சை மிளகாய் சிறிது மல்லி தூவி விட்டு மட்டன் தக்காளி பிரட்டலை பரிமாறவும்.
No comments:
Post a Comment