Friday, June 26, 2009

பொன்னிற இறால் வருவல்





தேவையான பொருட்கள்
1. பெரிய இறால் - 300 கிராம்.
2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
4. மஞ்ச்ள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
6. கிரீன் சில்லி ஸாஸ் - 2 தேக்கரண்டி
7. வினிகர்
8. கலர் பவுடர் - 1 சிட்டிகை
9. கார்ன் ஃப்ளோர் - 3 மேஜை கரண்டி
10. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
11.கருவேப்பிலை
12. பச்சை மிளகாய் - 3 (நடுவில் பிளக்கப்பட்டது)
13. எண்ணெய்
14. உப்பு

செய்முறை
சுத்தம் செய்யப்பட்ட இறாலை இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், கிரீன் சில்லி ஸாஸ், கலர் பவுடர், வினிகர், உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து, ஒரு மனி நேரம் மாரினேட் செய்யவும்.
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், கருவெப்பிலை நன்றக பொரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மாரினெட் செய்யப்பட்ட இறாலை கார்ன் ஃப்ளோர் மற்றும் அரிசி மாவில் நன்றாக பிரட்டி ஒவ்வொன்றாக பொன்னிறகமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
பொரித்து வைக்கப்பட்ட கருவெப்பிலை, பச்சை மிளகாயுடன் அலங்கரித்து பரிமாறவும்..

காய்கறி மட்டன் தால்ச்சா







தேவையான பொருட்கள்
  • துவரம் பருப்பு - 100 கிராம்
  • கடலை பருப்பு - 75 கிராம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 5
  • பீன்ஸ் - 50௦௦ கிராம்.
  • காரட் - 1
  • சிறிய கத்திரிக்காய் - 150௦ கிராம்
  • வாழைக்காய் - 1
  • எலும்பு கறி - 250 கிராம்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  • பட்டை, சோம்பு சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • மல்லி, கருவேப்பிலை
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மாங்காய் அல்லது புளி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


செய்முறை
இரண்டு பருப்புகளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்த பருப்புகளுடன் சிறிதளவு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சிறிது எண்ணெய், கறி சேர்த்து மூன்று விசில் வரை குக்கரில் வேகவைக்கவும்.

நன்றாக கொதிக்கும் சிறிதளவு தண்ணீரில் சிறிதாக வெட்டிய பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்திரிக்காய் போட்டு சிறிதளவு மஞ்சள் தூள், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் போட்டு சோம்பு, பட்டை, நறுக்கிய வெங்காயம் வதக்கவும். வதக்கியபிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். நைசாக வெட்டிய தக்காளி, தேவையான உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீராக தூள், தனியா தூள், இரண்டு பச்சை மிளகாய் , சிறிது மல்லி, கருவேப்பிலை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

மேற்கண்ட மசாலாவுடன் வேகவைத்த பருப்பு மற்றும் காய்கறிகளும், மாங்காய் அல்லது புளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து மல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் சிம் இல் வைத்து இறக்கிவிடவும்.

Tuesday, June 23, 2009

மட்டன் தக்காளி பிரட்டல்






தேவையான பொருட்கள்



  • மட்டன் -1/2 கிலோ

  • வெங்காயம் - 1

  • பழுத்த சிகப்பு தக்காளி - 4

  • இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • சீராக தூள் - 1/2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

  • சிறுது மல்லி, பச்சை மிளகாய் - 2

  • உப்பு ,- தேவையான அளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை



  1. வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக அரைக்கவும்

  2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து தண்ணீர் காய்ந்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை காய்ச்சவும் .

  3. இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

  4. நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மட்டனை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

  5. மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீராக தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி விட்டு, குக்கரை மூடி விடவும்.

  6. 3 விசில் வந்த பிறகு குக்கரை திறந்து கரம் மசாலா தூள், நைசாக வெட்டிய ஒரு பச்சை மிளகாய் சிறிது மல்லி சேர்க்கவும்.
  7. அடுத்து 2 விசில் வந்த பிறகு தண்ணீர் வற்றி இருக்கிறதா என்று பார்த்து இறக்கிவிடவும்.

  8. பரிமாறும் போது நைசாக வெட்டிய ஒரு பச்சை மிளகாய் சிறிது மல்லி தூவி விட்டு மட்டன் தக்காளி பிரட்டலை பரிமாறவும்.

Sunday, June 21, 2009

சுக்கா கோழி வறுவல்

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத கோழி - 1 கிலோ (சிறு சிறு துண்டுகள் )
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
வினிகர் - சிறிதளவு
கிரீன் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
கேசரி (சிகப்பு) பவுடர் - 3 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

கார்ன் ப்ளௌர் - 4 மேஜைகரண்டி
மைதா மாவு - 4 மேஜைகரண்டி
அரிசி மாவு - 2 மேஜைகரண்டி

ரிபைன்ட் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை

1) எலும்பு நீக்கப்பட்ட கோழியை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பூண்டு விழுது, வினிகர், கிரீன் சில்லி சாஸ், கேசரி பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற (மாரிநெட்) வைக்கவும்.

2) பெரிய வாணலியில் பொரிக்க தேவையான எண்ணையை காய வைக்கவும்.

3) நன்றாக காய்ந்த எண்ணெயில் ஊற வைக்கப்பட்ட கோழி துண்டுகளை, ஒன்றாக கலக்கப்பட்ட கார்ன் ப்ளௌர், மைதா மாவு, அரிசி மாவில் பிரட்டி எடுத்து, ஒவ்வொரு துண்டாக பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்

Saturday, June 20, 2009

Dum Mutton Briyani







தம் மட்டன் பிரியாணி 8 பேருக்கு

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கிலோ
ஆட்டுக் கறி - 1 1/4 கிலோ
எண்ணெய் - 200௦௦
வெங்காயம் பெரியது - 8
தக்காளி - 3
தயிர் - 400௦௦ கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
எலுமிச்சை பழம் பெரியது - 1
இலவங்கம் - 8
ஏலக்காய் - 8
பட்டை, பிரிஞ்சி இலை, குங்குமபூ - சிறிதளவு
பால் 1/2 கப்
கொத்தமல்லி , புதினா - ஒவ்வொரு கட்டு, (நான்கு பங்குகளாக)
உப்பு தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை நீட்டுவாக்கில் அரிந்து, அதின் பாதியை பொன்னிறமாக பொறித்து தனியாக வைத்துகொள்ளவும்.

அதே எண்ணையில் மீதமுள்ள வெங்காயத்தை வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுது , லேசாக அரிந்த 5 பச்சை மிளகாய், ஒரு பங்கு மல்லி, புதினா சேர்த்து மீண்டும் ஒரு நிமிஷம் வதக்கி, சுத்தம் செய்யப்பட ஆட்டுக்கறியை சேர்க்கவும்.

பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக அடிக்கப்பட்ட தயிரை சேர்க்கவும். கறியை சேர்க்கும்பொழுது நன்றாக கிளறி இந்த மசாலா சமமாக இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.

அரை கிளாஸ் தண்ணீரை சேர்க்கவும். வட்டமாக அறியப்பட்ட 3 தக்காளி சேர்க்கவும். மீண்டும் ஒரு பங்கு மல்லி புதினா சேர்க்கவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

கறி நன்ற்ர்க வேக 25 நிமிடங்கள் ஆகும். கறி வேகும்போது அடி பிடிக்காமல் இருக்க அடிக்கடி பார்த்துகொள்ளவும். நீர் குறைந்து மசாலாவும் கறியும் ஒன்றாக ஆகி கெட்டியாக இருக்கவேண்டும்.

இப்பொழுது எண்ணெய் மேலே மிதந்து கொண்டிருக்கும். இந்த எண்ணையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து வைத்துகொள்ளவும்.
மற்றுமொரு பாத்திரத்தில் பாலில் குங்குமபூவை கரைத்து வைத்துகொள்ளவும்.

இப்பொழுது அரிசியை 20௦ நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிவந்த பிறகு ஏலக்காய் இலவங்கம் பட்டை ஒரு பங்கு மல்லி புதினா போடவும். பிறகு ஊற வாய்த்த அரிசியை சேர்த்து கொஞ்சம் எண்ணெய், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும். கலக்கும்போது அரிசி உடையாமல் பார்த்து கொள்ளவும். அரிசி 60 விழுக்காடு மட்டும் வேகவேண்டும். வெந்த அரிசியை தண்ணீர் சுத்தமாக இல்லாமல் வடிகட்டி தனியாக வைக்கவும்.

இப்போது அரிசி வெந்த பாத்திரத்தை சுத்தமாக துடைத்து, அதில் ஒரு லேயர் அரிசி, அடுத்தலேயரில் கறியுடன் சேர்ந்த மசாலா, கொஞ்சம் குங்குமப்பூ கலந்த பால், எலுமிச்சை சாறு கலந்த எண்ணை, சிறிதளவு பொன்னிறமாக பொறித்த வெங்காயம், சிறிதளவு மல்லி புதினா சேர்க்கவும். மூன்றவது லேயர் மீண்டும் அரிசி, நான்காவது லேயர் மேலேகுறிப்பிட்ட மசாலா, ஐந்தாவது லேயர் அரிசி, ஆறாவது லேயர் மேலேகுறிப்பிட்ட மசாலா, கடைசியாக ஏழாவது லேயரில் அரிசி, அத்துடன் கொஞ்சம் பொன்னிறமாக பொறிக்கப்பட்ட வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா, குங்குமப்பூ கலந்த பால், எலுமிச்சை சாறு கலந்த எண்ணை, தூவி பாத்திரத்தை கொஞ்சமும் காற்று போகாதவண்ணம் தட்டில் ஒரு துணியை கொண்டு நன்றாக மூடி, தட்டின் மேல் ஒரு கனமான பொருளை வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் ஒரு தோசை கல்லைவைத்து அதன்மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும்.

25 நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து பார்த்தல் கமகமக்கும் ஆவியுடன் நமது சுவையான தம் மட்டன் பிரியாணி ரெடி.